கடனை திருப்பிக் கேட்டதால் கோபம்: தாய், மகன் படுகொலை

திருச்சி: தாயையும் மகனையும் அடித்துக் கொன்றவரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லால்குடி அருகே உள்ள புள்ளம் பாடி ஊராட்சி ஒன்றியத்தின் முன் னாள் தலைவர் ராமசாமி. இவரது தங்கை தனபாப்பு. தனிப்பட்ட காரணங்களுக்காக தன் தங்கை யிடம் பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார் ராமசாமி. அண்ணனுக்கு உதவும் என்ப தற்காக தனபாப்புவும் தயக்கமின்றி அத்தொகையைக் கொடுத்தி ருந்தார். இந்நிலையில் திடீரென ராமசாமியின் உடல்நலம் பாதிக்கப் பட்டது. அவர் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மகன் ராஜகோபாலிடம், தாம் கடனாக கொடுத்த 10 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார் தனபாப்பு. ஆனால் ராஜகோபால் பணத்தை தரவில்லை. மாறாக, அவர் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்களைக் கடத்தி வந்த தாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த தனபாப்பு, கொடுத்த பணத்தைக் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். இந்நிலையில், தனபாப்புவும் அவரது மகன் சத்தியமூர்த்தியும் நேற்று முன்தினம் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த ராஜகோபால் இருவரையும் இரும்புக் கம்பியால் சரமாரியாக அடித்துக் கொலை செய்தார்.