சுடச் சுடச் செய்திகள்

சனீஸ்வரர் கோவிலில் தீ விபத்து

காரைக்குள்: மின்கசிவு காரணமாக திருநள்ளார் சனீஸ்வர பக வான் கோவிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட் சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இக்கோவிலில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களைக் கண்காணிப்பதற்கு என கோவில் வளாகத்தில் தனி அறை உள்ளது. கோவில் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள இந்த அறையில், நேற்று முன்தினம் திடீர் மின்கசிவு ஏற்பட்டதில் தீ மூண்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவியதில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் துரித கதியில் செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon