திரையுலகம் போராட்டமான உலகம்: சிபிராஜ்

ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்கும் வரை திரையுலகம் என்பது மிகுந்த போராட்டமான உலகம்தான். வெற்றிக்குப் பிறகு? அதைத் தக்க வைப்பதற்கான போராட்டங்கள் தொடரும். எனவே போராட்டம் பழகிவிடும். அந்த வகையில் தனது முதல் பெரிய வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுபவர்களில் சிபிராஜும் ஒருவர். இந்நிலையில், ‘சத்யா’ என்ற படத்தில் ஒப்பந்த மாகி உள்ளார். இதை இயக்குபவர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி. இவர் ஏற்கெனவே ‘சைத்தான்’ படத்தை இயக்கியவர். ‘சத்யா’ படம் சிபிக்கு நிச்சயம் திருப்புமுனை படமாக அமையும் என்று உத்தரவாதம் அளிக்கிறார். தெலுங்கில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் மறுபதிப்பே ‘சத்யா’. சத்யராஜ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, சிபி ராஜ், ரம்யா நம்பீசன், வர லெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இப்படத்தின் நாயகி ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார் போலிஸ் அதிகாரியாகவும், ஆனந்த் ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இதில் வரலெட்சுமி கதாபாத்திரம் படத்துக்கு மிகுந்த பலம் சேர்க்குமாம். “இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார். எனவே அவருடைய தோற்றத்தை மாற்றி புதிதாக காட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை யாக இருந்தது. இதை அவரிடம் கூறியதும், என்ன சொன்னாலும் செய்யலாம் என்று முன்வந்தார். அவரது ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது,” என்று பாராட்டும் இயக்குநர் பிரதீப்புக்கு, சிபி மீது சிறிய வருத்தமும் உள்ளது. அது என்னவாம், எதற்காகவாம்? குறிப்பிட்ட ஒரு காட்சியில் கதாநாயகிக்கு சிபி உதட்டில் முத்தமிட வேண்டும் என்றாராம். ஆனால் சிபியோ முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம்.

“கதைப்படி இந்த முத்தக் காட்சி தேவையானதாக இருந்தது. சிபிராஜிடம் நான் அந்தக் காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் தம்மால் நடிக்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டார். “நான் அந்தக் காட்சி யின் முக்கியத்துவத்தை எவ்வளவோ விளக்கியும் பலன் இல்லை. அந்தக் காட்சியை அவருடைய மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதுதான் இதற்குக் காரணம். அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல தகப்பனும் கூட. ‘சத்யா’ ஜூன் மாத இறுதியில் வெளியாக உள்ளது,” என்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon