சுடச் சுடச் செய்திகள்

கண்ணதாசனின் பேரன் அறிமுகமாகும் ‘வானரப்படை’

கண்ணதாசன் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் திரையுலகில் கால் பதித்துள்ளார். அவர் பெயர் முத்தையா. இவர் கவிஞரின் பேரன். ‘வானரப்படை’ படத்தின் கதாநாயகன் இவர்தான். இவருடன் பஞ்சு சுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள். அவந்திகா என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் பிரபல நடிகைகளுடன் விளம்பர படங்களில் நடித்த வர். அவருடன் 9 முதல் 11 வயதுக்குட்பட்ட அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற 6 சிறுவர், சிறுமியர்கள் கள் ளம் கபடமில்லாத கலாட்டாவுக் காக தேர்வு செய்யப்பட்டுள் ளனர். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மனப் போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக இது உருவாகிறது என்கிறார் இயக்குநர் ஜெயபிரகாஷ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon