‘முழுமையான சென்னைப் பெண்’

வாரத்துக்கு ஒருமுறை யல்ல, இப்போதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து தினமுமே ஒரு செய்தி வெளியாகிறது. இது அண்மைய தகவல். ‘வடசென்னை’ படத் துக்காக வெற்றிமாறன் என்னைத் தேர்வு செய்தது ஏன்? எனத் திருவாய் மலர்ந்துள்ளார் அம்மணி. இப்படத்தில் வட சென்னையைச் சேர்ந்த, தைரியமான, துணிச்சலான பெண் ணாக நடித்துள்ளாராம். “முழுமையான சென்னை பெண் என்றால் பலர் என்னை அப்படி தொடர்புபடுத்திக் கொள்வார்கள். அதனால்தான் வெற்றிமாறன் என்னை தேர்ந்தெடுத்தார் என நினைக்கிறேன்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இது தமக்கு முற்றிலும் புதிய கதாபாத்திரம் என்பவர், எத்தகைய வேடத்திலும் நடிப்பதற்கு ஒரு சவுகரியமான நிலை அவசியம் என நினைப்பதாகச் சொல்கிறார். “தனது நடிகர்கள் தன்னிச்சையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். கதையுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்த விரும்புவார் என்பதால் அவருடன் பணியாற்றும்போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவேண்டும்,” என்கிறார் ஐஸ்வர்யா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் சூர்யா. அதனால் மாணவ சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் என்று சூர்யாவை பாராட்டிய நடிகர் ரஜினி காந்த், இளையர்கள் தமிழின் சிறப்பு குறித்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். கோப்புப்படம்

23 Jul 2019

'இளையர்கள் தமிழின் சிறப்பை அறிந்திருக்க வேண்டும்'

‘நுங்கம்பாக்கம்’ படத்தில் நடித்துள்ள புது முகங்கள் மனோ, ஐரா. படம்: ஊடகம்

23 Jul 2019

எதிர்ப்புகளைக் கடந்து வெளியீடு காண்கிறது ‘நுங்கம்பாக்கம்’