அயாக்ஸ் அணியை வீழ்த்தியது மேன்யூ

ஸ்டாக்ஹோம்: யூரோப்பா லீக் காற்பந்துக் கிண்ணத்தைக் கைப்பற்றி மான்செஸ்டர் யுனைடெட் அணி அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற யூரோப்பா லீக் இறுதிப்போட்டியில் அயாக்ஸ் அணியும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதின. 18வது நிமிடத்தில் பால் போக்பாவும் 48வது நிமிடத்தில் மிகிதார்யானும் கோல்களைப் புகுத்தினர்.

கடைசி வரை அயாக்ஸ் அணியால் ஒரு கோல் கூடப் போட முடியாத நிலையில், 2-0 என மேன்யூ வெற்றி பெற்றது. ரூனி கடைசி நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கினார். இது மேன்யூவிற்காக அவர் விளையாடிய கடைசி ஆட்ட மாக இருக்கலாம் என்றும் சொல் லப்படுகிறது. முக்கிய ஆட்டக்காரர்களான எரிக் பெய்லி, இப்ராகிமோவிச் ஆகிய இருவரும் இல்லாமல் மேன்யூ யூரோப்பா லீக் கிண் ணத்தை வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இதன்மூலம் இப்பருவத்தில், 2வது முக்கிய கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது மேன்யூ. இப் பருவத்தில் இஎஃப்எல் கிண்ணத் தையும் அது வென்றுள்ளது.

யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற களிப்பில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி