கிரிக்கெட்டிலும் சிவப்பு அட்டை: ஐசிசி பரிந்துரை

துபாய்: திடலில் மிக மோச மாக நடந்துகொள்ளும் வீரர்ர்களைத் திடலைவிட்டு வெளியேற்ற ஏதுவாக நடுவர்களுக்குச் சிவப்பு அட்டை அதிகாரம் அளிக்க அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) கிரிக் கெட் குழு யோசனை தெரி வித்துள்ளது. அத்துடன், நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் ‘டிஆர்எஸ்’ முறையை டி20 போட்டி களிலும் அறிமுகப்படுத்த அனில் கும்ளே தலைமை யிலான ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், ‘எல்பிடபிள்யூ’ தீர்ப்புகளை மறுஆய்வு செய்யும்போது, ‘அம்பயர்ஸ் கால்’ என்ற வகையில் முடிவை சில நேரங்களில் நடுவரே தீர்மானிக்க முடியும்.

அந்தச் சமயங்களில் பாதிக்கப்படும் அணிக்கான ஒரு மறுஆய்வு வாய்ப்பைப் பறிக்கத் தேவையில்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத் தப்படும் பட்சத்தில், 80 ஓவர்களுக்கு இரண்டு மறு ஆய்வு வாய்ப்புகள் என்ற முறை அகற்றப்படும். அதேபோல, டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் போட்டிகளை நடத்துவதற்கும் குழு ஒரு மனதாக ஆதரவு தெரிவித் துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

தலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2019

கோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி