சுடச் சுடச் செய்திகள்

பொருளியல் வளர்ச்சி 2%க்கு மேல் இருக்கும்

அனைத்துலகப் பொருளியல் சூழ் நிலை ஏறுமுகமாக இருப்பதால் இவ்வாண்டு சிங்கப்பூர் பொரு ளியல் வளர்ச்சி இரண்டு விழுக் காட்டிற்கு மேல் இருக்கலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் பொரு ளியல் மேம்பாடு கண்டு வருவதால் கடந்த ஆண்டை ஒப்புநோக்க இந்த ஆண்டில் அனைத்துலக அளவிலும் பொருளியல் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப் படுவதாக அமைச்சு கூறி இருக் கிறது. ஆண்டு அடிப்படையில் ஒப்பு நோக்க, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் பொரு ளியல் 2.7% வளர்ச்சி அடைந்து இருப்பதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித் தது. முன்னதாக, 2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 2.5% எனக் கணிக்கப்பட்டு இருந்தது. முன்னுரைக்கப்பட்டதைவிட அதிகமாக பொருளியல் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு உற்பத்தித் துறை கண்ட எழுச்சியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துலகப் பொருளியல் சூழ்நிலை முன்னேறி வந்தாலும் இடர்கள் இன்னும் நீடிப்பதாக அமைச்சு எச்சரித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon