பயிற்றுவிப்பாளர் மீது மானபங்கக் குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூரின் அனுபவமிக்க தடகள பயிற்றுவிப்பாளரான லோ சான் நியூ என்பவர் மீது நேற்று நீதிமன்றத்தில் 5 மான பங் கக் குற்றங்கள் சாட்டப்பட்டன. 72 வயதான லோ, சிங்கப்பூர் தடகள போட்டிகளுக் கான ஏற்பாட்டுக் குழுவில் துணைத் தலைவராக உள்ளார். இந்தக் குற்றங்களை கடந்த 2011ஆம் ஆண்டு இறுதி யிலிருந்து 2013 மார்ச் வரை இவர் செய்துள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் மூலம் தெரியவந் துள் ளது. லோ வலுக்கட்டாயமாக பெண் களின் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட பெண்க ளின் வயது 16 மற்றும் 18. பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தப் பெண்களின் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்தப் பயிற்றுவிப்பாளர் முன் னாள் தேசிய குறுந்தொலைவு ஓட்ட வீரர். இவர் 1973ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய தீபகற்ப விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொண்டு வெள் ளிப் பதக்கம் பெற்றார். இவர் சிங்கப்பூர் சிறைச்சாலையின் முன்னாள் துணைக் கண்காணிப்பாளராகவும் பதவி வகித்தவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்