சட்டவிரோத பங்குப் பரிவர்த்தனை: வங்கியாளருக்கு $180,000 அபராதம்

சிஐஎம்பி குரூப் ஹோல்டிங்ஸ் வங் கியின் முன்னாள் வங்கியாளரான டே இயோ கீ என்பவர், சட்டவிரோத பங்குப் பரிவர்த்தனைகளில் ஈடு பட் டதை நேற்று நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார். இந்தக் குற் றத் திற்காக அவருக்கு நீதிமன்றம் நேற்று $180,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. குவாலிட்டிஸ் மெடிக்கல் குரூப், பற்ற வைக்கும் பொருட்கள் விநி யோகிப்பாளரான லீடன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து டே இயோ கீ சட்டவிரோதமாக பங்கு களை வாங்கினார். பங்குகள் பற்றிய தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இவர் பங்குகளை சட்டவிரோத மாகப் பெற்றுள்ளார். இந்த இரு நிறுவனங் களுக்குமே சிஐஎம்பி வங்கி நிதி ஆலோசகராகச் செயல் பட்டு வந்த தாக அரசு வழக்கறிஞர் ஜோயல் சென் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் செயலுக்காக மிகவும் வருத்தப்படும் தனது கட்சிக் காரருக்கு இப்போது எந்த வரு மானமும் இல்லை என்று தற்காப்பு வழக்கறிஞர் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்