நாய்க்குட்டியால் தகராறு, படுகொலை

சென்னை: பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய். இவர் பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். நாய்கள் வளர்ப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அத னால் தெருவிலுள்ள நாய்களுக்கு தினமும் உணவளித்து வருவார் என்றும் கூறப்படுகிறது. விஜய் வேலை செய்யும் ஆட்டோ நிறுத்தம் அருகே வசித்து வருபவர் வெள்ளையப்பன். இவரும் அந்த பகுதியிலுள்ள தெரு நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார். விஜய்க்கும் வெள்ளையப்பனுக் கும் இடையே நாய்க்குட்டி வளர்ப் பதில் முன்விரோதம் இருந்து வந் ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் பெரம்பூர் ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தத் தில் அமர்ந்து தான் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு உணவு வழங்கி னார். அதைப் பார்த்த வெள்ளையப் பன் அந்த நாய்க் குட்டி தமக்குச் சொந்தம் எனக் கூறி தூக்கிச் சென்றுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கை கலப்பானது. இதைத் தொடர்ந்து அருகில் இருந்த இரும்புத் தடியால் விஜய்யின் மண்டையில் வெள்ளை யப்பன் அடித்துவிட்டு தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த விஜய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மாண்டார். தலைமறைவான வெள்ளையப்பனை ஐசிஎஃப் போலி சார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon