சுடச் சுடச் செய்திகள்

பொது மருத்துவமனையில் தானியக்க சக்கர நாற்காலி

சிங்கப்பூரின் முதல் தானி யக்க சக்கர நாற்காலியைக் கடந்த செப்டம்பரில் சாங்கி பொது மருத்துவமனையில் பயன்படுத்தி சோதித்த பிறகு சிங்கப்பூர்-எம்ஐடி ஆய்வுத் தொழில்நுட்பக் கூட்டமைப்பு (SMART) அதில் மேம்பாடு களைச் செய்து வருகிறது. இந்தக் கூட்டமைப்பு மாசூசட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிலையம் (எம்ஐடி), சிங் கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகிய மூன்றும் இணைந்து தானியக்க வாகனத்தை உருவாக்குகின்றன. தானியக்கச் சக்கர நாற் காலியை உருவாக்கும் திட்டப் பணி முதன்முதலில் சுமார் 18 மாதங்களுக்கு முன்பு தொடங் கியது. மருத்துவமனையில் தானியக்கச் சக்கர நாற்காலி நடமாடக்கூடிய பாதைகளை ஆய்வுக் குழுவினர் வகுத்தனர்.

இந்த சக்கர நாற்காலியால் நிலையான பொருட்களையும் அசையும் பொருட்களையும் கண்டு கொள்ள முடியும். பின்பக்கமாகச் செல்லும் வகையில் இது வடிவ மைக்கப்படவில்லை. ஆனால், சக்கர நாற்காலியின் மத்திய உணர்கருவியால் கண்ணாடியை அடையாளம் காண முடியவில்லை என்பது 10 மணிநேர முன்னோட்டச் சோதனையின்போது தெரிய வந்தது. எனவே, புறவொலி உணர்கருவிகள் தேவையா என்பது குறித்து ஆய்வுக் குழுவினர் தற்போது பரிசீலித்து வருகின்றனர். தாதிகள் நோயாளிகளுக்காக சக்கர நாற்காலிகளும் வண்டிகளும் தேடி எடுப்பதற்குத் தங்கள் நேரத்தில் 40 விழுக்காட்டைப் பயன்படுத்துகின்றனர் என்றார் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் டேனியலா ருஸ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon