சுடச் சுடச் செய்திகள்

மெர்பாத்தி ரோடு வீடுகள் காலியாகின

மெர்பாத்தி ரோட்டில் 2010ஆம் ஆண்டு மறுமேம்பாட்டுப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள மூன்று தனியார் வீடுகளின் குடியிருப்பாளர்கள் ஒருவழியாக அங்கிருந்து வெளியேறினர். 2010ஆம் ஆண்டின் சந்தை மதிப்பீட்டின்படி அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக $1.7 மில்லியனில் இருந்து $3.3 மில்லியன் வரை வழங்கப்பட்டதாக அறியப்பட்டது. முதலில் வழங்கப்பட்ட 2015 ஆகஸ்ட் மாத காலக்கெடுவுக்குள் அவர்கள் வெளியேறவில்லை. அந்த வட்டாரத்தின் மேம்பாட்டுப் பணிகள் மேலும் தாமதமாகாமல் இருக்க, ஏப்ரல் மாதக் கடைசியில் அவர்களுக்கு அரசாங்கம் இறுதி கெடு கொடுத்ததுடன் அந்த வீடுகளைச் சட்டரீதியாகக் கையகப்படுத்திக்கொண்டது. அந்த வட்டாரத்தில் டௌன்டவுன் ரயில் பாதையின் மாத்தார் நிலையம் அமையவுள்ளது.