பலத்த காற்றில் நண்டுப் பண்ணை சேதம்

கிராஞ்சியில் உள்ள செங்குத்து நண்டுப் பண்ணையின் 20 அடுக்குகளில் 19 அடுக்குகள் வேகமாக நேற்று வீசிய பலத்த காற்றில் சரிந்துவிழுந்துள்ளன. இதனால் கில்ஸ் அண்ட் கிளவ்ஸ் நிறுவனத்திற்கு $200,000 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை 11 மணி அளவில், நண்டுகளுடன் அடுக்குகள் சரிந்து விழுந்ததாக நிறுவனத்தின் பேச்சாளர் திரு வின்சண்ட் ‌ஷிவ் ராஜ், 45, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். இதனால் பண்ணை 100 கிலோ கிராம் நண்டுகளை இழந்தது. ஒரு நண்டின் விலை சராசரியாக $33 என்று திரு ராஜ் கூறினார்.

Loading...
Load next