‘மான்செஸ்டருக்கு நம்பிக்கை தந்த யூரோப்பா லீக்’

மான்செஸ்டர்: பலரது உயிரைப் பறித்த தற்கொலைத் தாக்குதலால் நிலைகுலைந்து போன மான்செஸ்டர் நகர மக்களுக்கு மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்றது உத்வேகம் தரும் வகையில் அமைந்திருக்கிறது என்று அக்குழுவின் முன்னாள் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்குசன் கூறியுள்ளார். ஸ்டாக்ஹோமில் நடந்த இறுதி ஆட்டத்தில் யுனைடெட் 2=0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தின் அயாக்ஸ் குழுவைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றியது. “வேலை செய்து பிழைக்கும் மக்கள் அதிகமானோரைக் கொண்ட நகரம் மான்செஸ்டர். இங்குள்ள மக்கள் அனைவரும் அற்புதமானவர்கள். அவர்கள் சில சிரமமான காலங்களை எதிர்கொண்டபோதும் அதில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒன்றிணைவர். மீள்திறன் மிக்க நகரம் மான்செஸ்டர். யுனைடெட்டின் வெற்றி அந்த மக்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது,” என்று ஃபெர்குசன் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி