ஆறுதல் தேடும் ஆர்சனல்

லண்டன்: இருபது ஆண்டுகளாக ஆர்சனல் குழு நிர்வாகியாக இருந்துவரும் ஆர்சின் வெங்க ருக்கு இந்த காற்பந்துப் பருவத்தில் மட்டும்தான் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இதுநாள்வரை எப்படியும் தனது குழுவை இடம் பெற வைத்து அழகு பார்த்து வந்த வெங்கருக்கு இந்தக் காற்பந்து பருவம் சோதனை மிகுந்ததாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளில் விளை யாடும் வாய்ப்பு பறிபோனது. மற் றொருபுறம், இவ்வளவு காலமாக அவருக்கு ஆதரவளித்து அவரை உற்சாகப்படுத்தி வந்த ஆர்சனல் ரசிகர்கள் அவர் குழுவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கொடிபிடித்து போராடி வருகின் றனர். இந்த நிலையில்தான் இன்று எஃப்ஏ கிண்ண இறுதிப் போட்டி யில் பிரிமியர் லீக் வெற்றியாளரான செல்சி குழுவை எதிர்கொள்கிறது ஆர்சனல்.

செல்சியை வீழ்த்தி எஃப்ஏ கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் அக்குழுவின் ஈடன் ஹசார்டைத் தடுத்தாள்வது மிக முக்கியம் எனக் கருதுகிறார் ஆர்சனல் குழுவின் ஏரோன் ரேம்சி. படம்: ஏஎஃப்பி