சிறிய சண்டையை பெரிதாக்குகிறார்கள் - தாடி பாலாஜி

குடும்பத்தில் நடக்கும் சாதாரண சண்டையை தான் சிலர் ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று நடிகர் தாடி பாலாஜி வருத்தமாக கூறியுள்ளார். நடிகர் தாடி பாலாஜி தன்னைச் சாதி பெயரைச் சொல்லி திட்டி, அடிப்பதாகவும் அவரின் கொடுமை தாங்க முடியாமல் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் அவரது மனைவி நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

“சண்டை எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா குடும்பத்திலும் நடக்கும் சாதாரண தகராறுதான். அதை போய் சிலர் ஊதி பெரிதாக்குகிறார்கள்,” என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால் நித்யாவோ, “பாலாஜியைக் காதலித்துத் திருமணம் செய்தேன். அவருக்குக் குடிப்பழக்கம் இருப்பது திருமணத்திற்குப் பிறகே தெரிய வந்தது. குடித்துவிட்டு என்னுடன் சண்டைபோட்டு அடிப்பார். சில சமயம் காயம் அடைந்து மருத்துவமனையில்கூட அனுமதிக்கப்பட்டுள்ளேன்,” என்று கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon