சுடச் சுடச் செய்திகள்

ரெஜினாவால் தொல்லைகளை சந்திக்கும் இயக்குநர்

எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரவணன் இருக்க பயம் ஏன்’ படத்தின் வெற்றியை அடுத்து படக்குழு நன்றி அறிவிப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய இயக்குநர் எழில், “சரவணன் இருக்க பயம் ஏன் படம் இறைவன் அருளால் வெற்றி பெற்றிருக்கிறது. “உதயநிதி ஸ்டாலின், சூரி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘எம்புட்டு இருக்கு ஆசை’ பாடலை இதுவரை 20 லட்சம் பேர் பார்த்திருப்பதாகக் கூறினார்கள். “ரெஜினாவின் அழகும் இத ற்கு ஒரு காரணம். அவருடைய கைபேசி எண்ணைக் கேட்டுப் பலர் என்னை தொல்லை செய் கிறார்கள்,” என்றார். அதைத் தொடர்நது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ ஒரு கல் ஒரு கண்ணாடி படம் எனக்குப் பெரிய வெற்றியாக அமைந்தது. “கதிர்வேலன் காதல் ஓரளவு வெற்றி பெற்றது. இன்னும் சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகாவிட்டாலும் தற்போது, ‘சரவணன் இருக்க பயம் ஏன்’ அனைத்து ஊர் களிலும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. “அடுத்த படத்திற்கான திரைக்கதையை எனக்காகத் தயார் செய்துவிட்டதாக எழில் சொன்னார். இடையில் ஒரு படம் முடித்துவிட்டு வரு கிறேன் என்று கூறியிருக்கிறேன்," என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon