படக்காட்சிகள் வெளியான அதிர்ச்சியில் விஜய், படக்குழு

விஜய் நடித்து வரும் படத்தின் காட்சிகள் அவ்வப்போது இணையத்தளங்களில் வெளியா வதால் விஜய், அப்படக்குழு வினர் மிகவும் அதிர்ச்சி அடைந் துள்ளனர். விஜய்=அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்குப் பீதியைக் கிளப்பியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய், காஜல் அகர்வால் நடித்த பாடல் காட்சி வெளி யானது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விஜய் சம்பந்தப்பட்ட காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் விஜய் வேட்டி அணிந்து மிகவும் அமைதியாக நின்றுகொண்டிருப்பது போல் உள்ளது. இப்படியாக அடுத்து அடுத்துப் படக்காட்சிகள் வெளி யாவது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இனிமேல் படப்பிடிப் பில் அதிக பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Loading...
Load next