சண்டையில் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர்

தெற்கு பிலிப்பீன்ஸ் நகரமான மராவியில் ஊடுருவியிருக்கும் ஐஎஸ் தொடர்புடைய பயங்கர வாதிகளில் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் இருப்பதாக பிலிப்பீன்ஸ் ராணு வம் தெரிவித்துள்ளது. “மராவியில் ராணுவத்திற்கு எதிராகச் சண்டையிட்டு வரும் பயங்கரவாதிகளில் சிங்கப்பூரர் கள், மலேசியர்கள் போன்ற வெளிநாட்டவர்களும் உள்ளனர். அவர்களில் பலர் சண்டையில் கொல்லப்பட்டதாக வரும் தக வல்களைத் தொடர்ந்து நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம்,” என்று பிரிகேடியர் ஜெனரல் ரெஸ்ட்டிடுடோ பெடிலா செய்தி யாளர்களிடம் கூறினார்.

அண்மையில், இஸ்னிலான் ஹேப்பிலான் என்பவனை தென் கிழக்காசியாவில் தனது இயக் கத்தின் தலைவனாக ஐஎஸ் அமைப்பு அறிவித்தது. அவன் மறைந்திருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் மராவியில் பிலிப்பீன்ஸ் ராணுவம் அதிரடி சோதனையில் இறங்கியது. இதையடுத்து, சுமார் நூறு பயங்கரவாதிகள், முஸ்லிம்கள் அதிகம் வாழும் மராவிக்குள் ஊடுருவினர். அவர்களை அழித்தொழிப்பதற்காக கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் துணையுடன் ராணுவப் படை அங்கு அனுப்பப்பட்டது. ஆனால், நேற்றுக் காலை நிலவரப்படி பயங்கரவாதிகள் நகரின் பல பகுதிகளில் மறைந்திருப்பதாகக் கூறப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon