இந்தியாவுக்கு மொரீ‌ஷியஸ் ஆதரவு

புதுடெல்லி: ஐ.நா. பாதுகாப்புக் மன்றத்தில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு நிலை யான ஆதரவு அளிப்போம் என மொரீ‌ஷியஸ் பிரதமர் தெரிவித் துள்ளார். மொரீ‌ஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ளார். நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் வெளியறவு அமைச்சர் சுஷ்மாவைச் சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையே வியாபார ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி னார். கடல்சார் ஒப்பந்தம் உள் ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத் தாகின.

இதனையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியா, மொரீ ‌ஷியஸ் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாக அந் நாட்டிற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3,227 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். மொரீ‌ஷியஸ் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறை யாக வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவை ஜகநாத் தேர்வு செய்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். இரு நாட்டுக் கடற்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது நமது பொறுப்பு என நானும் பிரதமர் ஜகநாத்தும் ஒப்புக்கொண்டுள்ளோம். மேலும், மொரீ‌ஷியஸ் வளர்ச்சிக்கு இந்தியா தனது சிறப்பான பங்களிப்பை வழங்கும் எனவும் மோடி தெரிவித்தார்.

அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள மொரீ‌ஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத்தை கைகுலுக்கி வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!