அமைச்சரின் சமையல்காரர் பெற்ற ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம்

சண்டிகார்: பஞ்சாப் மாநில மின்துறை அமைச்சராக இருப்பவர் ராணா குர்ஜித். பஞ்சாப் சட்ட மன்றத்தில் பணக்கார எம்எல்ஏ இவர்தான். இவரது சொத்து மதிப்பு ரூ.169 கோடி. இவருக்குச் சொந்தமாக சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. குர்ஜித்திற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் சமையல் காரராக இருப்பவர் அமித் பகதூர், 36. மாதம் ரூ.11,706 சம்பளம் பெறும் இவர், ஒரு மாதத்திற்கு முன்புதான் தனது சமையல் வேலையிலிருந்து விலகினார். இவர் அண்மையில் பஞ்சாப் அரசு நடத்திய மணல் குவாரி ஏலத்தில் கலந்துகொண்டு, ரூ.26.51 கோடி மதிப்பிலான குவாரி உரிமத்தைப் பெற்றுள்ளார். மணல் குவாரி உரிமம் பெறுவதற்கான ஏலத்தொகையில் முதல் தவணையாக ரூ.13.34 கோடியை மே 21ஆம் தேதி பகதூர் செலுத்தி உள்ளார்.

ஏலத்தொகையுடன் இவர் அளித்துள்ள சான்றில் குறிப் பிட்டுள்ள தகவலின்படி பகதூரின் வங்கிக் கணக்கில் கடந்த ஓராண்டில் ரூ.18,000 முதல் ரூ.22,000க்கு மேல் பணம் இருந்ததே இல்லை. ஏப்ரல் 1ஆம் தேதி கணக்கீட்டின் படி இவரது வங்கிக் கணக்கில் ரூ.4,840 மட்டுமே இருந்துள்ளது. இந்தத் தகவல் வெளியே கசியத் துவங்கியதும் பகதூர் தனது கைபேசியை அடைத்து வைத்து விட்டார். குர்ஜித்திடம் கேட்டபோது, "என்னிடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்தார் கள். இப்போதும் பார்க்கிறார்கள். அவர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு என்ன செய்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என நான் நிமிடத்துக்கு நிமிடம் கண் காணிக்க முடியாது. என் நிறுவனத்தில் வேலையில் இருந்து சென்றவர்கள் செய்யும் காரியத் திற்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது," என தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!