தமன்னா: என் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கிறது

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பாகுபலி 2’ படத்தில் தமன்னா நடித்த சில காட்சிகளை நீக்கிவிட்டார் ராஜமௌலி. அதனால் தமன்னா கடும் அதிருப்தியில் இருக்கிறார். மேலும், சமூக வலைதளத்தில் பலரும் ‘பாகுபலி 2’ படத்தில் விளம்பரதாரர்கள் பெயர்கள் இடம்பெறும் நேரத்தைவிட, தமன்னா வரும் நேரம் மிகவும் குறைவு என்று கருத்துகளை வெளியிட்டு வந்தார்கள். இச்சர்ச்சை குறித்துத் தமன்னா அளித்துள்ள பேட்டியில், “யாரோ வெட்டியாயிருப்பவர்களின் கற்பனை இது. என்னை அவந்திகா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்காக ராஜமௌலிக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். இது ஆதாரமற்ற செய்தி. படத்தில் வேலை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ராஜமௌலி மீது எனக்கு என்றுமே பெரிய மரியாதை உள்ளது. இந்தச் சரித்திரப் படத்தில் பங்கேற்றதில் எனக்குப் பெருமை. ஒரு நடிகையாக என் வாழ்வை இந்தப் படம் மாற்றிவிட்டது,” என்று கூறியுள்ளார் தமன்னா. அவர் அளித்துள்ள இப்பதிலால், ‘பாகுபலி 2’ குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்த் திரைக்கு வந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ‘கோலிவுட்’, ‘டோலிவுட்’ இரண்டிலும் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இவருடைய பெயர் இரண்டாவது நிலையில் இருக்கிறது. இவர் ‘பாகுபலி’யில் நடித்திருந்த அவந்திகா கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு நிறைய படங்கள் தற்பொழுது வந்தவண்ணம் இருக்கிறதாம். தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இவருடைய கால்‌ஷீட்டிற்காகக் காத்திருப்பதாகக் கூறும் இவர், “தற்பொழுது நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்க எனக்கு நிறைய வாய்ப்பு இருக் கிறது. அதனால் நான் அவசரப்படாமல் பொறுமை யாகக் கதைகளைக் கேட்டு முடிவெடுக்கிறேன்,” என்று கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ படத்தில் சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

17 Oct 2019

பின்னணிக் குரல் கொடுத்த சாக்‌ஷி

‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார் சுனைனா.

17 Oct 2019

சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். படம்: ஊடகம்

17 Oct 2019

நிகிஷா: சேலைதான் கவர்ச்சி