அனுஷ்கா: திருமணத்தடை நீங்க சிறப்பு வழிபாடு

‌‌‌‌சாதகத்தில் தோஷம் இருப்ப தாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் சோதிடர்கள் தெரிவித்ததால் திருமணத்தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகைக் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தார். இந்தக் கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர். சிறப்பு வழியில் செல்லா மல் கையில் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுடன் பக்தர்கள் கூட்டத்தோடு அவர் வரிசையில் நின்றார். முக்கிய பிரமுகர் களுக்கான பாதுகாப்பு வசதி எதையும் அவர் கேட்கவில்லை. அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகி யோரும் சென்று இருந்த னர்.

கோயில் சன்னிதி அருகில் சென்ற பிறகுதான் பூசாரிகளுக்கு அவரை அடையாளம் தெரிந்ததாம். தட்டை வாங்கி அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்திருக் கின்றனர். திருமணத்தடை நீங்குவதற்காக இந்தப் பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மங்களூரில் இருக்கும் துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கும் சென்று பூஜை செய்தனர். ஆனால் இதுபற்றி அவரின் தந்தை கூறுகையில், “பாகுபலி 2’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருப்பதால் அனுஷ்கா கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டார்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon