திருமணத்திற்கு முன் கவர்ச்சியில் இறங்கிய சமந்தா

சமந்தா இனி நடிக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் அண்மையில் அதை பொய்யாக்கும் விதமாக கவர்ச்சியாக உடையணிந்து அந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்த அவருடைய மாமனார் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப் பதாகத் தகவல் வெளியாகி இருக் கிறது. சமந்தாவிற்கும் நாக சைதன்யா விற்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி திருமணம் நடத்துவது பற்றி இரு குடும்பத்தினரும் பேசி வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என்று அனுமதி வழங்கியிருந்தனர் சைதன்யா குடும்பத்தினர். அதனால் அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார். ஆனால் படங்களில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறித்தான் அவர் படங்களை ஒத்துக்கொண்டு வருகிறார்.

அண்மையில் சமந்தா கைத்தறி ஆடைகளின் தூதராக பொறுப்பு ஏற்றிருக்கிறார். கைத்தறி ஆடைகளில் கவர்ச்சிக்கு இடமிருக்காது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களின் எண்ணத்தை மாற்றும் வகையில் கைத்தறியில் தயாரிக்கப்பட்ட கவர்ச்சியான உடையை சமந்தா அண்மையில் அணிந்து அந்தப் படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் படம் திரையுலகினர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக் கிறது. அதேநேரத்தில் அவரின் இந்த நடவடிக்கை சைதன்யா குடும்பத்தி னருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. எது பற்றியும் கவலைப்படாமல் திருமணத்திற்காக 3 மாதம் விடுமுறை எடுக்கவும் முடிவெடுத்து இருக்கிறார். சமந்தாவின் காதல் வாழ்க்கையில் சிறு சலசலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது கோலிவுட்.

Loading...
Load next