சுடச் சுடச் செய்திகள்

சொந்த செலவில் பாலம் கட்டும் கிராம மக்கள்

தரங்கம்பாடி: நாகபட்டிணம், காரைக்கால் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் சந்திரப்பாடி அருகே மிகவும் சேதமடைந்த சிறிய பாலத்தைக் கட்டும் பணியை அவ்வூர் மக்களே மேற்கொண்டுள்- ளனர். நாகபட்டிணம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரப்பாடி என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள பூவம் நண்டலாறு பாலத்தில் இருந்து சுமார் இரண் டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊருக்கு, சுமார் 1 கி.மீ. தூரத்துக்குப் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் எல்லைப் பகுதியில் உள்ள சாலை வழியாகத் தான் செல்ல முடியும். சாலையின் இருபுறமும் பள்ளமான பகுதி களுடன் மிகவும் குறுகலாக இந் தச் சாலை அமைந்துள்ளது. இச் சாலையின் குறுக்கே அமைந்துள்ள பெரிய வடிகால் வாய்க்கால் ஒன்றின் குறுக்கே அமைக்கப் பட்டிருந்த சிறு பாலம் சுமார் இரண்டு ஆண்டுகளாக சேத மடைந்த நிலையில் உள்ளது. ஊராட்சி மன்றத்தின் சார்பில் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்- திடம் கோரிக்கை விடுத்தும் எந்த- வித நடவடிக்கையும் எடுக்கப்பட- வில்லை. இந்நிலையில், பாலத்தை இடித்துவிட்டுப் புதிய பாலம் கட்டும் பணியை சந்திரப்பாடிக் கிராம மக்களே முன் வந்து கடந்த சில நாட்களாக மேற்கொண்டுள் ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon