சுடச் சுடச் செய்திகள்

ஐஎஸ் தொடர்புடைய 6 பேர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 6 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். மே 23ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மலேசியாவின் பல மாநிலங்களில் போலிசார் மேற்கொண்ட சோதனைகளின்போது அந்த 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிளந்தானைச் சேர்ந்த முகம்மது முசாஃபா அரிஃப் ஜுனைய்டி. இவர் தானாகவே போலிசாரிடம் சரண் அடைந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியாவில் உள்ள போராளிகள் குழுக்கள் பயன்படுத்துவதற்காக ஆயுதக் கடத்தலில் அரிஃப் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படு கிறது. போலிசார் மேலும் இரு சகோதரர்களையும் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராக்கில் சமயப் போதகராக பணியாற்றியதாகவும் மற்றொருவர் இணையம் வழி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தாகவும் மலேசியப் போலிசார் கூறினர்.