பிலிப்பீன்சில் சண்டை: தப்பியோடும் மக்கள்

மணிலா: பிலிப்பீன்சில் மராவி நகருக்குள் ஊடுருவியிருக்கும் போராளிகளைத் துடைத்தொழிக்க பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினர் கடந்த ஐந்து நாட்களாகக் கடும் சண்டையிட்டு வருகின்றனர். கவச வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ராணுவத்தினர் கடுமையாகச் சண்டையிட்டு வரும் வேளையில் சண்டைக்குப் பயந்து நகரிலிருந்து மக்கள் தப்பியோடுவதாக அங் கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மராவி நகருக்குள் வெளி நாட்டினர் உள்ளிட்ட போராளிகள் சுமார் 100 பேர் ஊடுருவி யிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்நகரின் பல பகுதிகள் போராளி களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்நகரை மீட்க பிலிப்பீன்ஸ் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்கி வருவதால் குடியிருப்பு பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளிக்கின்றது. மராவி நகரில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து அந்நாட்டில் ராணுவச் சட்டம் நடப்பில் இருப்பதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அறிவித்தார்.

மராவி நகரில் ஊடுருவிய போராளிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நீடிக்கும் வேளையில் சண்டைக்குப் பயந்து மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்