சுடச் சுடச் செய்திகள்

லிபியாவில் போராளிகளுக்கு எதிராக எகிப்து தாக்குதல்

கெய்ரோ: எகிப்தில் கிறிஸ்துவர் கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தலுக்குப் பதிலடியாக லிபியாவில் உள்ள போராளிகளின் தளங்கள் மற்றும் முகாம்கள் மீது எகிப்து தாக்குதல் நடத்தியுள்ளது. லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள போராளிகளின் பயிற்சி முகாம்கள் மீது எகிப்திய விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதாக கெய்ரோ தகவல்கள் கூறின. எகிப்து-லிபியா எல்லையில் தாக்குதல்களை நடத்திவரும் போராளிகள் பயன்படுத்தி வரும் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்த எகிப்து ஒருபோதும் தயங்காது என்று எகிப்திய அதிபர் அப்டெல் ஃபட்டா அல் சிசி, எகிப்திய மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் கூறினார். உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழிநடத்த வேண்டும் என்றும் எகிப்திய அதிபர் அல் சிசி வேண்டுகோள் விடுத்தார். உலக அளவில் பயங்கர வாதத்தை எதிர்த்துப் போராடுவதே தமது முதல் பணி என்று திரு டிரம்ப் கூறிய வார்த்தையை தாம் நம்புவதாகவும் திரு அல் சிசி கூறினார். முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்டுள்ள திரு டிரம்ப், எகிப்திய அதிபரை சந்தித்துப் பேசியபோது எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட இரக்கமற்ற தாக்குதலை வன்மை யாகக் கண்டித்தார்.

எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது துப்பாக்கிக்காரர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 29 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒரு தேவாலயத்தில் நடந்த இறுதிச் சடங்கில் உறவினர்கள் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon