சாங்கி விமான நிலையம் பாத்தாம் மீது கண் வைக்கிறது

சாங்கி விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தைப் பெருக்கும் நோக்கத்தில் இந்தோனீசியாவின் பாத்தாம் தீவைப் பயன்படுத்திக்கொள்ள மிகவும் நாட்டமாக இருக்கிறது. அந்தத் தீவிலிருந்து பயணிகள் சிங்கப்பூருக்கு வந்து இதர விமானங்களைப் பிடித்து பயணம் செய்ய வசதியாக படகு, பேருந்துச் சேவை ஒன்றை வழங்கலாம் என்று சாங்கி விமான நிலையம் திட்டமிடுகிறது. பயணிப் படகுகள் தானா மேராவுக்கும் பாத்தாம் மைய படகுத்துறை முனையங்களுக்கும் இடையில் ஏற்கெனவே சேவையை நடத்துகின்றன.

அடுத்த வாரம் முதல் தானா மேரா படகுத்துறை முனையத்திற்கும் சாங்கி விமான நிலையத்திற்கும் இடையில் இடைவழி பேருந்துச் சேவைகள் தொடங்கும். படகில் சென்று வருவதற்கான கட்டணம் எல்லா செலவு உட்பட $49 ஆக இருக்கும். ஒரு வழி பேருந்துக் கட்டணம் $2. நாள் ஒன்றுக்கு ஐந்து படகு சேவைகளும் 10 பேருந்துச் சேவைகளும் இடம்பெறும். பாத்தாம் ஒருபுறம் இருக்க, ஜோகூர் பாருவிலிருந்து வரவும் அங்கு செல்லவும் 2010 முதல் நாள்தோறும் 12 பேருந்துச் சேவைகளை சாங்கி விமான நிலையம் நடத்தி வருகிறது.

Loading...
Load next