இயற்கை வள பெருமையை கொண்டாட இருநாள் விழா

சிங்கப்பூரின் இயற்கை பாரம்பரியத் தைப் போற்றிக் கொண்டாட ஊக்கமூட்டும் நோக்கத்தில் தேசிய பூங்காக் கழகம் இரு நாள் விழாவை நேற்றுத் தொடங்கியது. இந்தக் கழகத்துக்கும் பல் கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங் கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை உள்ளிட்ட சுமார் 30 அமைப்புகளுக்கும் இடைப்பட்ட கூட்டுத் திட்டமாக அந்த விழா இடம்பெறுகிறது. உயிரியல் பன்மயம், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தாவ ரங்களின் சிற்றினங்கள், இந்த க் கழகத்தின் புதிய பூங்கா இணைப் புப் பாதை முதலான பலவும் அந்த விழாவில் முக்கிய இடத்தைப் பெற்று இருக்கின்றன. இயற்கை ஆதரவு அமைப்பு களுடன் சேர்ந்து கடந்த ஐந் தாண்டுகளில் பல கூட்டு ஆய்வு களை நடத்தி அவற்றின் மூலம் 500க்கும் அதிக சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக இந்தக் கழகம் அறிவித்துள்ளது. ஓல்டு அப்பர் தாம்சன் ரோட்டில் அமைக்கப்படும் ஒரு புதிய பூங்கா இணைப்புப் பாதை பற்றியும் நேற்று இந்தக் கழகம் அறிவித்தது. அந்தப் பாதை மத்திய நீர்த்தேக்க காட்டுவளப் பகுதிக்கும் தாம்சன் இயற்கை பூங்காவாக உருமாற விருக்கும் ஒரு காட்டுப் பகுதிக் கும் இடையில் அமையும்.

தேசிய பூங்காக் கழகத்தின் உயிரியல் பன்மய விழாவில் இடம் பெற்றுள்ள கூடங்களை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, பிரதமர் அலுவலக அமைச்சர் டெஸ்மண்ட் லீ இருவரும் பார்வையிட்டனர். படம்: சாவ் பாவ்