லாரா: கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும்

லண்டன்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கைப்பற்றும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். “இதுவரை நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளைவிட இவ்வாண்டின் போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஏனென்றால் அனைத்து அணிகளும் மிகவும் நல்ல நிலையில் உள்ளன. “சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்குச் சாதகமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணி கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி அடைந்து கிண்ணம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால் தற்போது அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் வியக்கத்தக்க வீரர்கள் உள்ளனர்,” என்றார் லாரா.

Loading...
Load next