பெர்னார்டோ சில்வாவை ஒப்பந்தம் செய்த சிட்டி

மான்செஸ்டர்: பிரெஞ்சுக் குழு மொனாக்கோவுக்காக இந்தப் பருவத்தில் களமிறங்கிய பெர்னார் டோ சில்வாவை இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி 43 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய் துள்ளது. போர்ச்சுகலைச் சேர்ந்த மத்தியத் திடல் ஆட்டக்காரரான சில்வா அடுத்த பருவத்திலிருந்து சிட்டிக்காக விளையாடுவார். இந்தப் பருவத்தில் பிரெஞ்சுக் காற்பந்து லீக் போட்டியில் பட்டம் வென்று சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரை இறுதி வரை சென்ற மொனாக் கோ குழுவில் இடம்பெற்றிருந்தார் சில்வா. சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவிடம் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்ததே சிட்டிக்கு விளையாட தாம் முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் என்று சில்வா தெரிவித்தார்.

“உலகில் உள்ள சிறந்த குழுக்களில் ஒன்றான சிட்டியில் இணைந்துள்ளேன். நிர்வாகி கார்டியோலாவின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை நான் இழக்க விரும்ப வில்லை. உலகில் உள்ள சிறந்த காற்பந்து நிர்வாகிகளில் அவரும் ஒருவர்,” என்று 22 வயது சில்வா தெரிவித்தார். இப்பருவத்தில் மொனாக்கோ வுக்காக 58 ஆட்டங்களில் சில்வா களமிறங்கியுள்ளார். அவற்றில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் சிட்டிக்கு எதிரான இரண்டு ஆட்டங்களும் அடங்கும். அவர் இந்தப் பருவத்தில் 11 கோல்களைப் போட்டுள்ளார்.

அடுத்த பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி குழுவுக்காகக் களமிறங்கும் போர்ச்சுகல் வீரர் பெர்னார்டோ சில்வா. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமது முன்னாள் குழுவான ரியால் மட்ரிட்டுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு பிஎஸ்ஜி குழுவின் வெற்றிக்கு வித்திட்ட அர்ஜெண்டினா ஆட்டக்காரர் ஏங்கல் டி மரியா. படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

மூவர் இருந்தும் முடியவில்லை: ரியால் நிர்வாகி ஸிடான் வருத்தம்

பந்தைத் தக்கவைத்துக்கொள்ள போராடும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிக்கலஸ் ஓட்டாமெண்டி (இடது), ஷக்தர் டோனட்ஸ்க் குழுவின் ஜூனியர் மொராயஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

பிரமிக்க வைத்த பிரேசில் வீரர்