தகுதியை உயர்த்திய தணியாத ஆர்வம்

மாதங்கி இளங்கோவன்

உயர்நிலைப்பள்ளியில் பல தோல்விகளைக் கண்டிருந்தாலும் முன்னேற்றம் குறித்த அயராத சிந்தனையால் வர்த்தகத் துறையில் பட்டயக் கல்வியை முடித்துள்ளார் 21 வயது சஹானா மனோகரன். கணிதம், கணக்கியல் பாடங் களில் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்த சஹானா, நன்யாங் பல துறைத் தொழிற்கல்லூரியில் வர்த்த கப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து இவ்வாண்டு பட்டயமும் பெற்றார். உயர்நிலைப்பள்ளியில் சில சவால்களைச் சந்தித்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வழக்கநிலைத் தேர்வினை முடித்து, பின் சாதாரணநிலைத் தேர்வினையும் எழுதினார்.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடினமாக உழைத்த சஹானா பள்ளித் தலைவர் (டீன்) பட்டியலில் இடம் பிடித்ததுடன் புத்தகப் பரிசையும் பெற்றுள்ளார். எம்1 நிறுவனத்தில் வேலை அனுபவம் பெற்றபோது இவர் தமது வேலைத் திறன்களைப் பெருக்கிக் கொண்டார். பலதுறைத் தொழிற்கல்லூரியில் மேற்கொண்ட திட்டப்பணிகளின் வழியாக முக்கியமான தலைமைத் துவப் பண்புகளைக் கற்றுக்கொண்ட தாகக் கூறும் சஹானா, தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் குறைந்த வருமானக் குடும்பங் களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குத் துணைப்பாட வகுப்புகளை வாரந்தோறும் நடத்தி வருகிறார்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெற சுய முயற்சியும் தொடர் உழைப்பும் தேவை என்கிறார் சஹானா மனோகரன்.

 

படம்: சஹானா

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி

20 May 2019

சிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள் 

தேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். 

(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 May 2019

சாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்