பொறியியல் மாணவர்களின் இசை சிகிச்சைக் கருவி

ரவீணா சிவகுருநாதன்

இசையைப் பயன்படுத்தி நோயாளிகளை எளிய முறையில் குணப்படுத்துவதற்கு உதவும் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர் ரவிச்சந்திரன் குமரேஷ். குழுவாகச் செயல்பட்டு இந்தப் படைப்பை உருவாக்கியுள்ள 20 வயதான குமரேஷ், இவ்வாண்டு விண்வெளி, மின்னணுவியல் பொறியியல் துறையில் பட்டயக் கல்வி முடித்துள்ளார். கேகே மகளிர், சிறார் மருத்துவமனையுடன் இணைந்து இக்கருவி உருவாக்கப்பட்டது. பொதுவாக, நோயாளிகளின் உடல், உணர்வு, அறிவாற்றல், சமூகத் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப் பயன்படுத்துவதுதான் இசை சிகிச்சை. நோயாளிகளின் மனதை அமைதிப்படுத்த இசைக் கருவி களை இசை சிகிச்சையாளர்கள் வாசிக்கின்றனர்.

ஆசிரியர், கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் ஊழியர்கள் குமரேஷ் (இடமிருந்து மூன்றாவது), அவரது குழுவினர் ஆகியோர் தாங்கள் தயாரித்த இசைத் தள்ளுவண்டியுடன். படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி

Loading...
Load next