3,000 இளையருக்கு நிரலிடல் பயிற்சி வழங்கும் கூகல் நிறுவனம்

அறிவார்ந்த தேசமாக மாறிவரும் சிங்கப்பூரில் எதிர்காலத்துக்குத் தேவையான திறன்களை இளம் வயதினரிடையே வளர்க்கும் நோக்கில 8 முதல் 15 வயது வரையிலான பிள்ளைகளுக்கு நிரலிடுதல் பயிலரங்கை நடத்துகிறது கூகல் நிறுவனம். சிண்டா, சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், மெண்டாக்கி, யுரே‌ஷியர் சங்கம் ஆகிய சுய உதவி அமைப்புகளுடன் ‘கோட் இன் தி கம்யூனிட்டி’ என்ற நிரலிடல் பயிலரங்கை 20 வாரங்களுக்குக் கூகல் நிறுவனம் நடத்துகிறது. அதில் முதல் 10 வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் இம்மாதம் 20ஆம் தேதி தாங்கள் இதுவரை கற்றுக்கொண்டவற்றையும் உருவாக்கிய மென்பொருள்களையும் சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர் ஆகியோரிடம் பகிர்ந்துகொண்டனர்.

சிண்டாவின் தலைவரும் நிதி, சட்ட மூத்த துணையமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தப் பிள்ளைகளுக்கான மற்ற 10 வகுப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கும். இந்தத் திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடத்தி குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,000 தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்க கூகல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிஎச்ஐஜே (தோ பாயோ) உயர்நிலைப் பள்ளியில் முதலாமாண்டு பயிலும் அனிசா முரளி, 13, தாம் உருவாக்கிய செயலி பற்றி கூகல் நிறுவனத்தைச் சேர்ந்த திரு பிரசாந்த் தங்கவேல் (இடது), சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி பரதன் ஆகியோரிடம் விளக்கினார். படம்: கூகல் நிறுவனம், செய்தி: ரவீணா சிவகுருநாதன்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். 

(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 May 2019

சாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்  

தேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்பொரிமோ கவிதை சங்கமம் நிகழ்வின்போது நடந்த கலந்துரையாடலில் பல மொழிக் கவிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அருண் வாசுதேவ் கிருஷ்ணன், அழகப்பன் மெய்யப்பனுடன் தாய்லாந்து நாட்டு கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியல் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ். செல்வா ஆகியோர் பங்கேற்றனர். 

29 Apr 2019

தேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம்