நகர மைய சைக்கிள் பாதைக் கட்டமைப்பு

சிங்கப்பூரின் எந்தப் பகுதியில் இருந்தும் மத்திய வட்டாரப் பகுதிக்கு சைக்கிளில் எளி தாகச் செல்வது விரைவில் சாத்தியமாகவுள்ளது. தீவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து குடியிருப்புப் பேட்டைகளில் இருந்தும் சைக்கிள்களுக்கான பிரத்தியேக இணைப்புப் பாதைக் கட்டமைப்பை உருவாக்கும் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளது. அதன் தொடக்கமாக பென் கூலன் ஸ்திரீட்டில் 450 மீட்டர் நீளத்துக்கான சைக்கிள்களுக் கான பாதையும் 125க்கும் மேற் பட்ட சைக்கிள்களை நிறுத்து வதற்கான வசதியும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த சைக்கிளோட்டும் பாதை தற்போது அமைந்திருக் கும், எதிர்காலத்தில் அமைய விருக்கும் சிங்கப்பூர் முழுவதிலு மான சைக்கிளோட்டும் பாதை களுடன் இணைக்கப்படும். மேற்குப் பகுதியில் குவீன்ஸ் டவுன், வடக்குப் பகுதியில் பீஷான், வடக்கு-தெற்கு நடை பாதை, நகரின் மத்தியில் அமைந்திருக்கும் மத்திய சைக் கிள் பாதைக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் இது இணைக் கப்படும்.

பென்கூலன் ஸ்திரீட்டில் சைக்கிளோட்டுவதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பாதை நேற்று திறந்துவைக்கப்பட்டபோது அங்கு உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான கோ பூன் வான் (முன்வரிசையில் வலது) பொதுமக்களுடன் சைக்கிளோட்டினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!