சுடச் சுடச் செய்திகள்

கட்டட பராமரிப்புக்கு ஆணையம் புதிய ஏற்பாடு

சிங்கப்பூரில் கட்டடங்களின் வெளிப்புறப் பகுதிகளும் புற மாடங்கள் போன்ற அலங்கார வேலைப்பாடுகளும் நல்ல நிலை யில் பராமரிக்கப்பட்டு வருகின் றன என்பதை உறுதிப்படுத்த கட்டட, கட்டுமான ஆணையம் விரைவில் மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை ஏற்பாடு ஒன்றை அமல்படுத்தும். இந்த ஏற்பாடு, அரசாங்க மற்றும் தனியார் கட்டடங்களுக் குப் பொருந்தும். கட்டடங்களில் இடம்பெறக்கூடிய புற வேலைப் பாடுகள் காலக்கிரம முறைப்படி பரிசோதிக்கப்பட்டு முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் இருப் பதை உறுதிப்படுத்துவது இதன் நோக்கம். இதற்கிடையே, கட்டடங்களின் வெளிப்புறப் பகுதிகளைப் பரி சோதனையிடுவது பற்றிய பயிற்சி படிப்புகள் இந்த ஆண்டு பிற்பகுதி யில் தொடங்கப்படும் என்று இந்த ஆணையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜான் கியூங் தெரிவித்தார். வழக்கமான கால ஓட்டத்தில் கட்டடங்களின் வெளிப்புறப் பகுதிகள் மழை, வெயில், பருவ நிலை காரணமாக பாதிக்கப்பட லாம். அவற்றுக்கு கூடுதலான பராமரிப்பு ஏற்பாடுகள் தேவை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon