சுடச் சுடச் செய்திகள்

குலவழிச் சங்கங்களுக்கு பிரதமர் வலியுறுத்து

குலவழிச் சங்கங்கள் தொழில்நுட் பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதிக இளையர்களை எட்டி அவர்களுக்கு கலாசாரங்களைப் போதித்து அவற்றைப் பரம்பரை பரம்பரையாகக் காக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அத்தகைய சங்கங்கள், சமூக ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய நடவடிக் கைகளை அதிக இளையர்களுக் குத் தெரியப்படுத்தலாம் என்றார் அவர். கிராமியப் பாடல்களையும் தாலாட்டுப் பாடல்களையும் வர லாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங் களையும் தொகுத்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கான சொத் தாக அந்தச் சங்கங்கள் பாது காத்து வைக்கலாம்.

சிங்கப்பூர் குவாங்துங் குல வழிச் சங்கத்தின் 80வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் திரு லீ நேற்று கலந்துகொண்டார். சீனாவிலிருந்து சிங்கப் பூருக்கு 1937ல் வந்த கேண்டனிஸ், டியோசியூ, ஹாக்கா, ஹைனானிஸ் பிரிவினர்களுக்கு உதவுவதற்காக அதே ஆண்டில் இந்தக் குலவழிச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. சிங்கப்பூரின் தொடக்க காலத்தில் சீன சமூகத்தில் இச்சங்கங்கள் முக்கிய பணியாற்றியதாக மாண்டரினில் பேசிய திரு லீ குறிப்பிட்டார். புதிதாக சிங்கப்பூருக்கு வந்த சீனர்களுக்கு உதவி, வேலை வாங்கிக் கொடுத்து, வீடு கொடுத்து, மருத்துவ வசதி செய்துகொடுத்து இந்தச் சங்கங் கள் உதவியதாக திரு லீ கூறி னார்.

இன்றும் குலவழிச் சங்கங் கள் சமூகத்தில் பலருக்கும் உதவி வருவதாகவும் அறப்பணிகளைச் செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். குலவழிச் சங்கங்கள் இனி மேல் தேவைப்படாமல் போய்விடக் கூடும் என்று சிலர் நினைக்கக் கூடும். அந்தச் சங்கங்கள் முதி யோர்கள் சாதாரணமாகக் கூடிப் பேசுவதற்கான ஓர் இடமாகத்தான் இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் குலவழிச் சங்கங்கள் காலத்திற்குப் பின்தங்கிவிடாமல் மேம்பட்டு வர முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டி இருப்பதாக திரு லீ தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon