யீ‌ஷுன் காப்பிக்கடையில் ‘பயங்கரவாத தாக்குதல்’

அவசரகாலத்திற்குப் பொது மக்களை ஆயத்தப்படுத்தும் நோக்கத்தில் யீ‌ஷுன் காப்பிக் கடை ஒன்றில் நேற்று பயங்கரவாத தாக்குதல் பயிற்சி ஒன்று நடந்தது. துப்பாக்கிக் குண்டில் அடிபட்ட ஒருவருக்கு உதவுவது, மாரடைப்பு ஏற்பட்ட மற்றவருக்கு உயிர்கொடுப்பது, காப்பிக்கடை யில் பயங்கரவாத தாக்குதலைச் சமாளிப்பது ஆகிய சம்பவங்கள் ஜோடிக்கப்பட்டு மக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சுமார் 600 பேர் கலந்து கொண்டார்கள். பரபரப்பான காப்பிக்கடையில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததையடுத்து போலிசும் குடிமைத் தற்காப்புப் படையும் எப்படி செயல்பட்டன என்பதை மக்கள் கண்டனர். “இங்கு பயங்கரவாத சம்பவம் நடக்காது என்று நீங்கள் நினைக் கக்கூடும். ஆனால் பாத்தாமி லிருந்து சிங்கப்பூரை தாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்,” என்று நீ சூன் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி லீ பீ வா கூறினார்.

பயங்கரவாத தாக்குதலை படையினர் சமாளிக்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்