செல்சியை முறியடித்த வெங்கரின் படை

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஆர்சனல் வென்றுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்ற செல்சியை அது 2-1 எனும் கோல் கணக்கில் தோற் கடித்தது. இதன் மூலம் எஃப்ஏ கிண்ணத்தை ஆர்சனல் 13 முறை வென்றுள்ளது. அதன் நிர்வாகி ஆர்சின் வெங்கரின் தலைமை யின்கீழ் ஆர்சனல் அதன் ஏழாவது எஃப்ஏ கிண்ணத்தை ஏந்தி உள்ளது. இப்பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியிலும் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியிலும் ஏமாற்றத்தைச் சந்தித்த ஆர்சனல் எஃப்ஏ கிண் ணத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது. அதன்படி ஆட்டத்தின் நான் காவது நிமிடத்திலேயே ஆர்சனல் கோல் போட்டது.

செல்சி தற்காப்பு ஆட்டக் காரர்களைக் கடந்து சென்ற ஆர்சனலின் அலெக்சிஸ் சாஞ் செஸ் பந்தை வலைக்குள் சேர்த் தார். ‘ஆஃப்சைட்’டில் இருந்த ரேம்சி பந்தை நெருங்காமல் புத்திசாலித் தனமாக நகர்ந்துவிட சாஞ்செஸின் காலிலிருந்து புறப்பட்டுச் சென்ற பந்து செல்சி கோல்காப்பாளரைக் கடந்து சென்று கோலானது. கோல் போடுவதற்கு முன்பு பந்து சாஞ்செஸின் கைகளில் பட்டது என்று செல்சி ஆட்டக் காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உதவி நடுவரும் ஆர்சனலின் இந்த கோல் ‘ஆஃப்சைட்’ காரணமாகச் செல்லாது என்று கொடியைத் தூக்கினார்.

(மேல்படம்) ஆர்சனலின் வெற்றி கோலைப் போடும் எரோன் ரேம்சி (நடுவில்). பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க செல்சி கோல்காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. (வலப்படம்) அண்மைய காலமாகத் தம்மைக் குறைகூறி வந்த ஆர்சனல் ரசிகர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் வியூகம் வகுத்து எஃப்ஏ கிண்ணத்தைப் பெருமிதத்துடன் ஏந்தும் ஆர்சின் வெங்கர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை