சுடச் சுடச் செய்திகள்

திடீர் மின்தடை: கோவிலில் தூங்கிய குழந்தை கடத்தல்

சென்னை: திட்டமிட்டு மின் இணைப்பைத் துண்டித்து பச்சி ளம் குழந்தையைக் கடத்தியவர் களைப் பிடிக்க போலிசார் வலைவீசியுள்ளனர். நேற்று முன்தினம் அரக் கோணம் அருகே உள்ள அம்மன் கோவிலில் சிறப்புப் பூசை நடை பெற்றது. இதில் அரக்கோ ணத்தைச் சேர்ந்த சத்யராஜ் என் பவர் தன் மனைவி, ஒரு வயது மகனுடன் கலந்துகொண்டார். இரவு நேரமாகிவிட்டதால் மூவரும் கோவில் வளாகத்திலேயே தங்கிவிட்டனர். குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க, இரவு 11 மணியளவில் திடீரென கோவிலில் மின்சாரம் தடைபட்டது. சில நிமிடங்களில் மின்சாரம் வந்தபோது சத்யராஜின் குழந்தை மாயமாகி இருந்ததைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். கோவில் அருகே பல இடங் களில் தேடியும் குழந்தை கிடைக் காததால், போலிசில் புகார் அளித் தார் சத்யராஜ். விசாரணையில், மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்து, மின்சாரத்தை வேண்டுமென்றே துண்டித்து, குழந்தையை காரில் கடத்தியது தெரிய வந்தது. இந்நிலையில், நரபலிக்காக குழந்தை கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகி றது. இந்தச் சந்தேகத்தின் பேரில் இரு தனிப்படை போலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon