நின்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ: பெண் உட்பட மூவர் பலி

காஞ்சிபுரம்: சாலையில் நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்ததால், அதில் இருந்த மூவர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாமல்லபுரம் அருகே நிகழ்ந்தது. இந்த விபத்துக்கான காரணம் தற்போதைக்குத் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த மூன்று பேர், கடந்த வெள்ளிக்கிழமையன்று காரில் மாமல்லபுரம் சென்றிருந்தனர். திட்டமிட்டிருந்த பணிகளை முடித்த பின்னர் மூவரும் காரில் ஊர் திரும்ப இருந்தனர். அச்சமயம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் சாலையோரம் அந்த கார் நின்று கொண்டிருந்தது. மூவரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மூவரில் ஒரு பெண் ஆவார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அக்காரில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து காருக் குள் இருந்த மூவரும் பதறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். ஆனால் கார் கதவை அவர்களால் திறக்க முடியவில்லை எனக் கூறப் படுகிறது. இந்த இடைவெளியில் கார் முழுவதும் தீ மளமளவெனப் பரவியது. மூவரும் காரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

Loading...
Load next