சுடச் சுடச் செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள் ளத்தில் சிக்கி மாண்டோர் எண் ணிக்கை 146 ஆக அதிகரித்து உள்ளது. நிலச்சரிவுகளில் சிக்கி மாண்ட பலரது சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டதால் மரண எண் ணிக்கை அதிகரித்ததாகவும் மேலும் 112 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து, கீலனி ஆற்றை யொட்டி வசிப்பவர்களை அங் கிருந்து வெளியேற இலங்கை தேசிய பேரிடர் மீட்புக்குழு எச் சரிக்கை விடுத்துள்ளது. தியவன்ன ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலை யில், அடுத்த சில நாட்கள் மழை நீடித்தால் இலங்கை நாடாளு மன்றக் கட்டடத்துக்குள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நாடாளுமன்றக் கட்ட டத்தைச் சுற்றி மணல் மூட்டைகள் அரணாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.

நாடாளுமன்றக் கட்டடத்தைச் சூழ்ந்த வெள்ளம். படம்: ஊடகம்