கேரளாவில் மாட்டிறைச்சி விருந்துண்ணும் போராட்டம்

திருவனந்தபுரம்: இறைச்சிக்காக மாடுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரளாவின் பல பகுதிகளில் மாட்டிறைச்சி சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத் தரவை எதிர்த்து பிரதமர் மோடி யுடன் கலந்தாலோசிக்கப்போவ தாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந் நிலையில் ஆளும் கட்சியான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சி காங்கிரஸ், இவ்விரு கட்சிகளின் இளைஞர் பிரிவுகள் ஆகியன இந்த உத்தரவுக்கு எதிராக பேரணி நடத்தியதோடு மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சி விருந்து உண்ணும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்திற்கு வெளியே நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் மாட்டிறைச்சி சமைத்து உண் டதோடு அவற்றைப் பலருக்கும் விநியோகம் செய்தனர். போராட் டத்திற்குத் தலைமை வகித்த மார்க்சிஸ்ட் இளையர் பிரிவின் தேசிய தலைவர் முகமது ரியாஸ் கூறுகையில், “மாட்டிறைச்சி உண் பதன் மூலம் பிரதமர் மோடிக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறோம்,” என்றார்.

Loading...
Load next