ஏர் இந்தியாவை கைவிடுகிறது அரசு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவன மான ஏர் இந்தியா விமான நிறு வனத்திலிருந்து முழுமையாக வெளியேற மத்திய அரசு வாய்ப்பு களைத் தேடிக்கொண்டு இருப்ப தாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறு கையில், “ஏர் இந்தியாவுக்காக சரியான முதலீட்டாளரை எதிர் பார்க்கிறோம். அப்படி கிடைத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து மத்திய அரசு முழுமையாக வெளி யேறும். “விமானப் போக்குவரத்து சந் தையில் 84 விழுக்காடு பரிவர்த்தனைகள் தனியார் நிறுவனங்களால் கையாளப்படுகின்றன. 100 விழுக்காடும் தனியார்வசம் சென்றால்கூட தவறு இல்லை. “விமானப் போக்குவரத்தில் ஏர் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் குறைவு. ஆனால், அந்த நிறுவனத்தின் கடன் சுமை 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரை ரூ.50 ஆயிரம் கோடி.

“உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை 14.1% குறைந்துள்ளது. பிரதமராக வாஜ் பாய் இருந்தபோது விமான போக்குவரத்துத் துறை அமைச் சராகப் பணியாற்றினேன். ஏர் இந்தியாவின் பங்குகளை முழுமை யாக விற்பனை செய்து அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று அப் போதே கோப்பில் கையெழுத் திட்டேன். காரணம், விமான நிறு வனத்தை நடத்த வேண்டியது அரசின் தொழிலல்ல. “எனினும், இந்த ஏர் இந்தி யாவைக் கைவிடும் அம்சத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது தற்போதைய விமானப் போக்கு வரத்து துறை அமைச்சர் அசோக் கெஜபதி ராஜுதான். தனியார் விமான நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டால் மக்கள் வரிப்பணத் தில் இருந்து கொடுக்க வேண் டியது இல்லை. ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்த மத்திய அரசு ஏராளமாகப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அப் பணத்தை மீட்டெடுத்தால் பிற நல்ல துறைகளில் முதலீடு செய் யலாம்,” என்றார் ஜெட்லி.