சுடச் சுடச் செய்திகள்

கடத்தல்காரர்களைச் சுட்டு உறவினரை மீட்ட பெண்

புதுடெல்லி: தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற பெண்மணி கடத்தல்காரர்களைச் சுட்டு தமது உறவினரை மீட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஆசிஃப், 21, என்பவரை முகமது ரஃபி, ஆகாஷ் என்னும் இருவர் கடத்திச் சென்று ரூ.25,000 கொடுத்தால் விடுவிப்போம் என்று ஆசிஃப் பின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அந்தப் பெற் றோர் போலிசிடம் தெரிவித்தனர். போலிசின் வழிகாட்டுதல்படி ஆசிஃப்பின் சகோதரர் ஃபாலக் ஆலம், அவரது மனைவி ஆயிஷா ஃபாலக் ஆகியோர் கடத்தல்காரர் கள் குறிப்பிட்ட இடத்துக்கு பணத்துடன் சென்றனர். அப்போது அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த கடத்தல்காரர்கள் இருவரையும் எதிர்பாராதவிதமாக ஆயிஷா துப்பாக்கியால் குறிதவ றாது சுட்டார். அதில் இருவருக் கும் காயம் ஏற்பட்டதால் அவர்களால் அந்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல இயலவில்லை. தயா ராக இருந்த போலிசார், இருவரை யும் கைது செய்தனர். ஆயிஷா தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங் கேற்றவர். தற்போது துப்பாக்கி சுடும் போட்டிக்கான பயிற்சியாள ராகவும் இருக்கிறார். அவரிட மிருந்த துப்பாக்கியை போலிசார் பறிமுதல் செய்தனர். தற்காப்புக் காகவும் ஆசிஃப்பை உயிருடன் மீட்கும் பொருட்டும் அந்தப் பெண் துணிச்சலாகச் செயல்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon