மோசுல் குடிமக்களுக்கு ஆபத்து

வா‌ஷிங்டன்: மோசுல் நகரில் ஈராக் ராணுவத்தின் தாக்குதல் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் குடிமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஐநா மனி தாபிமான மீட்புக் குழுவினர் கூறி யுள்ளளனர். ஐஎஸ் பயங்கரவாதிகள் குடி மக்களின் குடும்பங்களுக்கு நேர டியாகக் குறி வைத்துள்ளதால் அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஐநா மனிதநேய குழு தெரிவித்தது. ஏற்கெனவே அந்த நகர மக்கள் மின்சாரம், தண்ணீர் இன்றி அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் ஐஎஸ் போராளிகளின் தாக்குதலை முறி யடித்து சனிக்கிழமை அன்று ஈராக்கிய படைகள் முன்னேறியுள்ளன.

Loading...
Load next