சுடச் சுடச் செய்திகள்

வடகொரியா: விமான எதிர்ப்பு முறை சோதனை

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையில் புதிய விமான எதிர்ப்பு முறை சோதிக்கப் பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்ததால் திரு கிம் பூரிப்பில் மிதந்தார். மேலும் விமான எதிர்ப்பு சாதனங்களைத் தயாரித்து நாடு முழுவதும் விநியோகிக்கவும் அவர் உத்தரவிட்டார். கடந்த வாரங்களில் பல ஏவு கணைகளை சோதனையிட்டுவந்த வடகொரியா ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய விமான எதிர்ப்பு முறைகளைச் சோதித்துப் பார்த்தது.

சாதனத்தின் விவரங் களையோ எந்த இடத்தில், எந்த நேரத்தில் சோதிக்கப்பட்டது என்ற விவரங்களையோ வடகொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிடவில்லை. ஆனால் ஏவு கணைகளையும் அணுவாயுதங் களையும் உருவாக்கி வருவதாகக் கூறப்படும் அந்நாட்டின் தேசிய தற்காப்பு, அறிவியல் பயிற்சி கழகம் சோதனைக்கு ஏற்பாடு செய்தது என்று அது தெரிவித்தது. கடந்த ஆண்டிலிருந்து அடை யாளம் தெரியாத இடத்தில் பல தரப்பட்ட ஆயுதங்களை வட கொரியா மேம்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவைத் தாக் கும் ஆற்றல் படைத்த தொலைதூர ஏவுகணைகளும் அடங்கும்.

விமான எதிர்ப்பு சோதனை வெற்றி பெற்ற பூரிப்பில் வடகொரியத் தலைவர் கிம். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon