மான்செஸ்டர் நகரைத் தாக்கிய மனித வெடிகுண்டு

மான்செஸ்டர்: மான்செஸ்டர் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டின் கடைசி நிமிட புகைப்படத்தை பிரிட்டன் போலிசார் வெளி யிட்டுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான சந்தேக நபரான சல் மான் அபிடி, ஜீன்ஸ்-கறுப்புச் சட்டை அணிந்திருந்தான். மூக்குக் கண்ணாடியுடன் அவன் காணப்பட்டான். சிறிய மீசை இருந்தது. கறுப்புத் தொப் பியுடன் முதுகில் கறுப்புப் பையையும் அவன் மாட்டியிருந் தான். அந்த 22 வயது நபரின் கடைசி நிமிட விவரங்களை வெளியிட்ட விசாரணையா ளர்கள், அவனுடைய கடைசி நிமிட நடமாட்டம் குறித்து தக வல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண் டனர். கடைசியாக அபிடி சென்ற இடம் சிட்டி சென்டர் வீடு என்றும் பின்னர் அங்கிருந்து அவன் மான்செஸ்டர் நகருக்குள் நுழைந்தான் என்றும் காவல் துறை அறிக்கை தெரிவித்தது. கடந்த திங்கட்கிழமை இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங் கத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் மாண் டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைதாகினர். படம்: மான்செஸ்டர் போலிசார்